காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகளில் பங்காளியாக முடியாது!
25.11.2026
15:27
2 நிமிட வாசிப்பு
மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் மீது நம்பிக்கையில்லை. முன்வைக்கப்படும் சிறந்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் குழு இதுவரையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகளில் பங்காளியாக முடியாது என்பதால் குழு கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கலந்துக் கொள்வதில்லை என செயற்குழுவின் தலைவரான அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்ட விடயம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது.மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை.கடந்த செப்டெமபர் மாதம் செயற்குழுவானது அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினமும் அறிக்கை சமர்ப்பிக்கப்படாமல் காலத்தை மேலும் நீட்டிக்கும் சாத்தியமே காணப்படுகிறது.பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபை தேர்தலை நடத்துவம் வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த தனிநபர் பிரேரணை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு சாதகமான யோசனை முன்வைத்துள்ள நிலையில் செயற்குழு அது குறித்து கவனம் செலுத்தவில்லை.மாகாணசபைத் தேர்தலில் நடைமுறையில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதை விடுத்து புதிய சிக்கல்களை உருவாக்கும் வகையில் தான் செயற்குழுவில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள்.அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. ஆகவே அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.காலத்தை வீணடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டில் பங்காளியாக முடியாது என்பதற்காக இந்த குழு நடவடிக்கைகளில் நாங்கள் பங்கேற்கவில்லை என்றார்.