கொவிட்-19 தொற்றினால் ஸ்பெயினில் 41இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

17.07.2021 10:43:25

 

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் 41இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் 41இலட்சத்து 222பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் ஸ்பெயினில் இதுவரை 81ஆயிரத்து 96பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 31ஆயிரத்து 060பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 58ஆயிரத்து 443பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 872பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 36இலட்சத்து 60ஆயிரத்து 683பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.