
மெக்சிகோ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு!
மத்திய மெக்சிகோவில் நடந்த வீதி விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புதன்கிழமை (14) காலை பியூப்லா மாநிலத்தில் உள்ள குவாக்னோபாலன் மற்றும் ஓக்ஸாகா இடையேயான நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டதை அடுத்து இந்த விபத்து ஏற்பட்டதாக மெக்ஸிகன் அரசாங்க அதிகாரி சாமுவேல் அகுய்லர் பாலா தெரிவித்தார்.
சம்பவ இடத்திலேயே 18 பேர் இறந்ததாகவும், பின்னர் மூன்று பேர் மருத்துவமனையில் இறந்ததாகவும் அவர் உறுதிபடுத்தினார்.
மேலும் பலர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக அவர் எக்ஸில் பதிவிட்டார்.
ஒரு டேங்கர் லொறியும், ஒரு பேருந்தும் மற்றும் ஒரு வேன் ஆகிய வாகனங்களே விபத்தில் சிக்கியவை ஆகும்.
அண்மைய ஆண்டுகளில் மெக்சிகோவில் நெடுஞ்சாலைகளில் பல கடுமையான விபத்துக்கள் நடந்துள்ளன.
கடந்த பெப்ரவரியில் தெற்கு மெக்சிகோவில் உள்ள டபாஸ்கோவில் நடந்த பேருந்து விபத்தில் பல பொது மக்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.