"என் வழிகாட்டியை இழந்துவிட்டேன்"

27.12.2024 09:27:23

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதை அடுத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(92) சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்நிலையில் வியாழக்கிழமை (டிச.26) இரவு 8.06 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் இரவு 9.51 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து மன்மோகன் சிங்கின் மறைவை அடுத்து மத்திய அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங் இழப்பிற்கு அக்கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மனமுறுக இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், இந்தியாவை வலிமையான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தியவர் மன்மோகன் சிங், அவரின் பணிவு மற்றும் பொருளாதாரம் குறித்த ஆழமான புரிதல் நாட்டை மேன்மை நிலைக்கு உந்தியது.

நான் என்னுடைய குரு மற்றும் வழிகாட்டியை இழந்துவிட்டேன், இந்த துயரமான நேரத்தில் கவுர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.

அவரை போற்றி பாராட்டும் கோடிக்கணக்கான மக்கள் அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வர் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

      Bookmark and Share Seithy.com