“சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் 100% உறுதியாக இருப்போம்”.
22.12.2025 15:21:53
தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று (22-12-25) கொண்டாடப்பட்டது. தவெக தலைவர் விஜய் தலைமையில், சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்ற இவ்விழாவில் 40 கிலோ கேக்கை வெட்டி 11 குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், “இது ஒரு அன்பான தருணம், அழகான தருணம். அன்பும் கருணையும் தானே எல்லோருக்கும் அடிப்படை. இது இரண்டுமே இருக்கும் மனசு தான் தாய் மனசு. நம் தமிழ்நாட்டு மண்ணும் அப்படிப்பட்ட மண், தாய் அன்பு கொண்ட மண்.