மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது,சிறுநீர் கழித்த அரசியல்வாதி

05.07.2023 10:33:57

மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியினச் சிறுவன் மீது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் மதுபோதையில், சிறுநீர் கழித்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், சித்தி தொகுதியின் பா.ஜ.க எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவரே குறித்த சிறுவனின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனின்  பெற்றோர், குறித்த நபர் அரசியல் பிரமுகர் என்பதால் அச்சத்தில் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து  புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.