டி20 தொடரை வென்றது வங்கதேசம்

09.09.2021 10:48:17

நியூசிலாந்து அணியுடன் நடந்த 4வது டி20 போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி 3-1 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 4வது போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசி. 19.3 ஓவரில் 93 ரன்னுக்கு சுருண்டது. வில் யங் 46, கேப்டன் லாதம் 21, பின் ஆலன் 12 ரன் எடுத்தனர். நசும் அகமது, முஸ்டாபிசுர் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.