மீனவர்கள் சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவிப்பு

05.02.2022 05:38:23

கடற்றொழில் சட்டத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்துமாறு கோரி, மீனவர்கள் சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்ய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறுவதை கண்டித்து சுப்பர்மடம் மீனவர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன், பல்வேறு தரப்பினர் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில், அனைத்து மீனவ சங்கங்களும் இணைந்து கோரும் பட்சத்தில், அவர்கள் சார்பில், தாம் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.