ETR.FM

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் அருள் விக்னேஷ்?

25.11.2026 14:44 2 நிமிட வாசிப்பு
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் அருள் விக்னேஷ்?
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டவர் அருள் விக்னேஷ். விஜயை பொறுத்தவரை தனது மக்கள் இயக்கத்தில் பல வருடங்களாக பணிபுரிந்த நிர்வாகிகளுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்தார். அப்படித்தான் அருள் விக்னேஷுகுக்ம் சீட் கிடைத்தது. அவரும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகிவிட்டார்.

ஒருபக்கம், பெண் மாவட்ட கலெக்டருக்கு அருள் விக்னேஷ் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்தார் என்கிற புகார் எழுந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த பெண் கலெக்டர் காவல்துறையில் புகார் அளிக்காமல் இருந்தார். மேலும், பெண் கலெக்டர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என தவெக அமைச்சர்கள் கூறினார்கள்.

இது தொடர்பாக அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பெண் கலெக்டர் அளித்த புகாரின் பேரில் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தவெக தரப்பில் சொல்லப்பட்டது. இதையடுத்து அருள் விக்னேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, திருப்பூர் மாவட்ட எஸ்.பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவரின் மீது விசாரணை துவங்கப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மகளிர் காவல்நிலையத்திற்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தால் முதலமைச்சர் விஜய்க்கும், தவெக ஆட்சிக்கும் தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், விரைவில் அருள் விக்னேஷ் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE பிரியமான தோழி