ETR.FM

இந்தியாவுக்கு மீண்டும் கூடுதல் வரிவிதிப்பா?

25.11.2026 14:45 1 நிமிட வாசிப்பு
இந்தியாவுக்கு மீண்டும் கூடுதல் வரிவிதிப்பா?
இந்தியா, சீனா உள்ளிட்ட பல வர்த்தக கூட்டாளிகள் மீது அமெரிக்கா வரி விதிப்பை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை வெளியிட்டுள்ளது
 
அதிகப்படியான தொழிற்சாலை உற்பத்திக்கு ஆதரவளிப்பதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டி, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரியர் 1974 வர்த்தகச் சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் நடத்திய விசாரணையின் முடிவுகளை வெளியிடவுள்ளார். 
 
ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியாவை விட இந்தியா மற்றும் வியட்நாமுக்கு அதிக வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், சீனாவுக்கு மேலும் கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மறுபுறம், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இடைக்கால இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. வங்கதேசம், வியட்நாம், கம்போடியா ஆகிய போட்டியாளர்களை விட அமெரிக்கச் சந்தையில் இந்திய பொருட்களுக்குக் குறைவான வரி விதிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. 
 
நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் முதல் கட்ட ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது; சேவைகள் தொடர்பான விவகாரங்கள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் எடுத்துக்கொள்ளப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE பிரியமான தோழி