ETR.FM

கனடாவின் புதிய அழைப்பு!

27.11.2026 07:57 2 நிமிட வாசிப்பு
கனடாவின் புதிய அழைப்பு!
Express Entry மூலம் 600 திறன்வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளது. கனடாவில் நிரந்தர வதிவிடம் (Permanent Residency) பெற விரும்பும் திறன்வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கு முக்கிய வாய்ப்பாக, Express Entry திட்டத்தின் கீழ் STEM (Science, Technology, Engineering and Mathematics) துறையைச் சேர்ந்த 600 பேருக்கு விண்ணப்பிக்க அழைப்பு (ITA) வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கனடாவின் குடியேற்றத் துறை Immigration, Refugees and Citizenship Canada (IRCC) வெளியிட்டுள்ளது.    
நவம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற இந்த சிறப்பு தேர்வில், அறிவியல், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இந்த சுற்றில் தேர்வாக குறைந்தபட்சமாக 547 CRS (Comprehensive Ranking System) புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களின் Express Entry சுயவிவரத்தை 2025 டிசம்பர் 2-ஆம் திகதிக்கு முன்னர் உருவாக்கியிருக்க வேண்டும்.குறிப்பாக, STEM பிரிவுக்கான Express Entry தேர்வு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய STEM குலுக்கல் 2024 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற நிலையில், அப்போது 4,500 பேருக்கு அழைப்புகள் வழங்கப்பட்டிருந்தன.2026-ஆம் ஆண்டில் மட்டும் கனடா Express Entry திட்டத்தின் மூலம் மொத்தம் 158,008 நிரந்தர வதிவிட அழைப்புகளை வழங்கியுள்ளது. இதில் French-language, Canadian Experience Class, Provincial Nominee Program, Healthcare, Trades மற்றும் STEM போன்ற பல்வேறு பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.சமீபத்தில் கனடா தனது CRS மதிப்பீட்டு முறையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி, கனடாவில் அதிக ஊதியம் வழங்கப்படும் தொழில்களில் பணியாற்றுவோருக்கும், கனேடிய வேலை அனுபவம் கொண்டவர்களுக்கும் கூடுதல் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. மேலும், சில வேலைவாய்ப்பு சலுகைகளுக்கு LMIA ஆவணம் இல்லாமலேயே கூடுதல் CRS புள்ளிகளைப் பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான திறமையான தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடியேற்ற நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக IT, மென்பொருள், பொறியியல் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் பணிபுரியும் நிபுணர்களுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது.
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE காலை மலர்