ETR.FM

இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடு, மாதாந்திர பணக்கொடை உயர்வு.

27.11.2026 08:06 2 நிமிட வாசிப்பு
இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடு, மாதாந்திர பணக்கொடை உயர்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை திறந்து வைத்த முதல்வர் விஜய், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு, தமிழ்நாடு அரசால் மாதாந்திரப் பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித்தொகை ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.   
மேலும், இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.8.52 கோடி செலவில் கட்டப்பட்டு, ரூ.1.37 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ள 148 புதிய வீடுகளை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.அதைத்தொடர்ந்து, முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்கி தொடங்கி வைத்தார்.குடும்பத் தலைவருக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர பணிக்கொடை ரூ.1,500லிருந்து ரூ.1,800ஆகவும், குடும்ப உறுப்பினர்களாகவுள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ரூ.1,000லிருந்து ரூ.1,200ஆகவும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.500லிருந்து ரூ.600ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இதன் மூலம், ஆண்டொன்றுக்கு ரூ.14.95 கோடி கூடுதல் செலவினத்தில், 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் பயன்பெற உள்ளனர்.இந்த நிகழ்வில், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, தலைமைச் செயலாளர் மு.சாய்குமார் இ.ஆ.ப உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
     
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE காலை மலர்