ETR.FM

மாவீரர் நாள் இன்று - நினைவேந்தலுக்கு தயாராகியுள்ள தமிழ் மக்கள்!

27.11.2026 08:14 1 நிமிட வாசிப்பு
மாவீரர் நாள் இன்று - நினைவேந்தலுக்கு தயாராகியுள்ள தமிழ் மக்கள்!
தமிழ் இனத்தின் விடிவுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் போராடி சாவினைத் தழுவிய வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும். தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எங்கிலும் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படவுள்ளன.   
இரு மாகாணங்களிலும் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் பல்வேறு நினைவேந்தல் இடங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவீரர்களின் உறவினர்கள், நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.மாவீரர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்கச் செய்யப்பட்டு ஆரம்பமாகவுள்ளன. தொடர்ந்து 6.06 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, 6.07 மணிக்கு ஈகச்சுடர் ஏற்றப்படவுள்ளது.
     
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE காலை மலர்