பாடலை கேட்டதும் வியந்து பாராட்டிய இயக்குனர் செல்வராகவன்

17.03.2021 10:08:28

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் உருவாகி உள்ளது.

பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் தான் தற்போது தமிழ்நாட்டின் பரபரப்பு. இளைஞர்கள் மத்தியில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் ஏஆர் ரகுமான் சுயாதீன கலைஞர்களுக்காக உருவாகியுள்ள மாஜா என்ற தளத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. தீ பாடிய இந்தப் பாடலுக்கு அவரின் தந்தை சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில், என்ஜாய் எஞ்சாமி பாடலை கேட்ட இயக்குனர் செல்வராகவன், அக்குழுவினரை வியந்து பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ‘என்ஜாய் எஞ்சாமி’ என்ன ஒரு பாட்டு, இப்பாடல் உருவாக்கமும் மிகவும் பிடித்திருந்தது. தீ, அறிவு மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என செல்வராகவன் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.