அலி சப்ரி, மீண்டும் நீதியமைச்சராக பதவிப்பிரமாணம்

27.04.2022 04:50:27

நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சு பதவிக்கு மேலதிகமாக அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.