மீண்டும் மலர்ந்திருக்கும் காதல்!! சிம்பு

10.01.2022 17:44:51

நீண்ட வருடம் கழித்து மீண்டும் சினிமாவில் ஒரு கம்பேக் கொடுத்து வெற்றி படத்துடன் ஆரம்பித்து பிசியான நடிகராக மீண்டும் மாறி இருக்கின்றார் நடிகர் சிம்பு. அப்படி இருக்கையில் மீண்டும் சிம்புவிற்கு காதல் மலர்ந்து இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சினிமாவில் டாப் நடிகைகளாக இருந்து வரும் பலருமே நடிகர் சிம்புவுடன் காதல் செய்தியில் சி க்கி விடுகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் ஒரு சில படங்களிலேயே நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து கோயில் கட்டும் வரை பிரபலமானவர் நிதி அகர்வால். இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ‘ஈஸ்வரன்’ மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ‘பூமி’ ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாகியது கூடுதல் சிறப்பு.

 

சினிமாவிற்கு வந்தே புதிய நடிகையாக இருந்தாலுமே கூட நடித்தால் பெரிய பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக தான் நடிக்க வேண்டும் என்று இருந்து வருகின்றார்கள். மேலும் நடிக்கும் அனைத்து படங்களுமே கிளாமருக்கு குறைவில்லாமல் நடித்து வருகின்றார். அப்படி இருக்கும் நிதி அகர்வால் அவ்வப்போது காதல் வ லை யிலும் சி க் க  வருகிறார். அதன்படி தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்தார். ஜோடியாக டேட்டிங்கெல்லாம் போன இவர்கள் திடீரென பிரேக் அப் செய்தனர்.

 

இந்த நிலையில் அவர் இப்போது சிம்பு மீது காதல் ம ல ர் ந் துள் ள தா ம். முதன் முதலாக சிம்புவுடன் சேர்ந்து ஈஸ்வரன் படத்தில் நடித்த போது நிதி அகர்வாலுக்கு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது இருவரும் நெ ருக் க மா க ப ழ க த் தொடங்கி விட்டார்களாம். எந்த அளவுக்கு என்றால் சிம்பு வீட்டிலேயே தங்கத் தொடங்கிவிட்டாராம் நிதி.

 

 

நடிகர் சிம்பு இதற்க்கு முன்பே இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்தவர் ஆவார். கடந்த 2006-ம் ஆண்டு வல்லவன் படத்தை இயக்கிய போது நயன்தாரா மீது காதல் வயப்பட்டார் சிம்பு. இது ஓரிரு ஆண்டுகளில் பிரேக் அப் ஆக, பின்னர் வாலு படத்தில் நடித்தபோது ஹன்சிகா மீது காதலில் விழுந்தார். இந்த காதலும் தோல்வியில் முடிந்தது. தற்போது நிதி அகர்வால் இது எங்க போய் முடியப்போகுதோ என நெட்டிசன்கள் பு ல ம் பி வருகின்றனர்.