நீட் தேர்வை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்!

20.06.2024 08:43:49

“நீட் தேர்வை அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என  பா.ஜ.கவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  இதன்போது ” தமிழ் நாட்டில் நீட் தேர்வு மூலமாகப் பல மாணவர்கள் பயனடைந்து வருகின்றார்கள் எனவும், நீட் தேர்வை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் இது ஏழை மாணவ-மாணவிகளுக்கு நம்பிக்கைக்குரிய தேர்வாக இருந்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன்  நீட் தேர்வில்  இடம்பெற்ற ஒரு சில குளறுபடிகளுக்காக அத் தேர்வையே ரத்து செய்ய நினைப்பது தவறு எனவும், நீட் தேர்வில் இடம்பெற்ற குளறுபடிகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும், யார் நினைத்தாலும் நீட்டை தவிர்க்க முடியாது எனவும் தமிழிசை சௌந்தரராஜன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.