மாலத்தீவுக்கு இந்தியா உதவிக்கரம்!
குடிநீர் மற்றும் கழிவு மேலாண்மையில் மாலத்தீவு நாட்டிற்கு இந்திய அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டது. இது மாலத்தீவின் சுற்றுலா துறையில் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே காரசார விவாதத்தை கிளப்பியது. |
இந்நிலையில் மாலத்தீவின் 28 தீவுகளில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் திட்டங்களுக்கு இந்திய அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதையடுத்து இந்தியா அரசுக்கு மாலத்தீவு ஜனாதிபதி மொய்சூ நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மாலத்தீவு சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்திய அரசுக்கு மாலத்தீவு நன்றியை பதிவு செய்துள்ளது.. கடந்த 2014-ல் மாலத்தீவு குடிநீர் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தின் போது கடுமையான குடிநீர் பஞ்சம் நாட்டில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது மாலத்தீவின் கோரிக்கைக்கிணங்க பல தவணைகளாக இந்தியா மாலத்தீவுக்கு குடிநீர் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. |