அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளம் பயன்படுத்த தடை

01.04.2024 01:14:00

இஸ்லாமாபாத்: நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் சமீபத்தில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்றார். அவரது தலைமையிலான 16 அமைச்சர்கள் பங்கேற்ற முதல் கூட்டம் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. அப்போது சிக்கனம் மற்றும் சேமிப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக பிரதமர், அமைச்சர்கள் தங்களது சம்பளம் மற்றும் அரசு சலுகைகளை கைவிட முடிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளம் பயன்படுத்த பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரசு நடைமுறையின்படி வௌிநாட்டு தலைவர்கள் வரும்போது மட்டும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.