இன்று விசேட பாதுகாப்பு திட்டம் அமுல்
11.10.2024 08:18:00
பொது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று (11) அனைத்து மாவட்ட செயலகங்களிலும் விசேட போக்குவரத்துத் திட்டமும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்த பின்னர் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.