வௌ்ளை சீனி இறக்குமதிக்கு இன்று முதல் மீள அனுமதி

30.09.2021 13:32:16

இன்று (30) முதல் வௌ்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொழும்பு துறைமுகத்தின் பொறுப்பிலுள்ள 81 சீனி கொள்கலன்களை நாளை (01) முதல் 10 நாட்களுக்குள் விடுவிக்குமாறு இறக்குமதியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சீனி இறக்குமதிக்கு 03 மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.