இரக்கமுள்ள உலகினை முன்னேற்ற வேண்டும்

24.08.2024 09:16:24

கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹரி, மேகன் தம்பதி மக்களுக்கு பல பரிசுகளை வழங்கியதை வெளிப்படுத்தினர். இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்லே தம்பதி தங்களது அரை - அரச சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து கொலம்பியா நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் கொலம்பிய துணை ஜனாதிபதி Francia Marquez உடன் இணைந்து பல இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.   

இந்த பயணத்தின் புதிய வீடியோவில் மக்களுக்கு பரிசுகள் வழங்குவதை அரச தம்பதி அறிவித்தனர்.

அவர்களின் அறிக்கையில், The Archewell அறக்கட்டளை மூலம் 'நாம் உலகில் எங்கிருந்தாலும், நல்லதைக் காட்ட வேண்டும்' எனும் தங்கள் இலக்கை எடுத்துக் காட்டினர்.

San Basilio de Palenque என்ற கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் ஆராய்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும், பாதுகாப்பான சூழலை அவர்களுக்காக மேம்படுத்தவும் ஹரி, மேகன் ஜோடி நிதி வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டது. மேலும், the Colegio La Giralda என்ற பாடசாலையில் தம்பதியர் 'சமூக உணர்ச்சி உடற்பயிற்சி திட்டத்தை' விரிவுபடுத்துகின்றனர்.

அவர்கள் தங்கள் நன்கொடைகளும் 'இன்னும் சமமான மற்றும் இரக்கமுள்ள உலகத்தை நோக்கி முன்னேற்ற வேண்டும்' என தெரிவித்தனர்.

அத்துடன், 'இந்த முயற்சிகள் ஒவ்வொன்றும், ஒரு வித்தியாசத்தை உருவாக்குவதற்கும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களை மேம்படுத்துவதற்கும், அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் எண்களின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகிறது' என ஹரி - மேகன் தம்பதி குறிப்பிட்டது.

முன்னதாக, the Archewell அறக்கட்டளை மூலம் தங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தம்பதியினர் உள்ளூர் பாடசாலை மாணவர்களுடன் கணிசமான நேரத்தை செலவிட்டதுடன் கொலம்பிய கலாச்சாரத்தில் தங்களை மூழ்கடித்தனர்.