மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்தார்
06.03.2022 09:36:08
நலத் திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற் பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, புனே நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியை தொடங்கி வைத்தார்.
மொத்தம் 32.2 கி.மீ. தூரம் கொண்ட இந்த திட்டத்தில் 12 கி.மீ. தூரத்திற்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
கார்வேர் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்டத்தை தொடங்கி வைத்ததுடன், அங்கிருந்து ஆனந்த் நகர் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.
இந்த பயணத்திற்காக அவர் டிக்கெட் பெற்றுக் கொண்டார். மெட்ரோ ரெயிலில் பள்ளி மாணவர்களுடன் பயணம் செய்த அவர் அவர்களுடன் கலந்துரையாடினார்.