இராணுவத் தளபதிகளை குறிவைத்து தாக்கிய ரஷ்யா!

15.04.2025 07:59:47

உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட துருப்புகளை கொன்றதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவம் உக்ரைனின் சுமி நகரத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 34 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 117 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என கூறியுள்ளது.

மாறாக, சுமி நகரத்தில் இராணுவத் தளபதிகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 60க்கும் மேற்பட்ட உக்ரைன் துருப்புகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

நகர மையத்தைத் தாக்கிய இந்தத் தாக்குதல், 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைனில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், எங்கள் இராணுவம் உக்ரைனின் இராணுவம் மற்றும் இராணுவம் தொடர்பான இலக்குகளை மட்டுமே தாக்குகிறது.

பொதுமக்கள் அல்லது குடியிருப்பு உள்கட்டமைப்பு குறிவைக்கப்படவில்லை என தெரிவித்தார்.