ரூ.1943 கோடிக்கு வாடகை ட்ரோன்களை வாங்கும் இந்தியா!
|
கடல்சார் கண்காணிப்பை பலப்படுத்தும் விதமாக MQ-9B Sea Guardian ட்ரோன்களை வாடகைக்கு எடுக்க இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் நீண்ட தூர உளவு மற்றும் வான் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் பாதுகாப்பு தளவாட நிறுவனமான ஜெனரல் அட்டாமிக்ஸிடம் (General Atomics) இருந்து இரண்டு MQ-9B SeaGuardian ட்ரோன்களை வாடகைக்கு எடுக்கும் புதிய ஒப்பந்தத்தை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. |
|
30 மாத வாடகை என்ற திட்டத்தின் கீழ் டெல்லியில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1943 கோடியாகும். இந்த தற்காலிக ஏற்பாடானது இந்திய பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளுக்கான உடனடி தயார் நிலையை உறுதிப்படுத்துகிறது. MQ-9B Sea Guardian ட்ரோன்கள் நீண்ட தூரம் பறந்து உளவு பணிகள் மேற்கொள்வதிலும், மிக துல்லியமான தாக்குதல்களையும் முன்னெடுக்க இது அதி நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டதாகும். கிட்டத்தட்ட 40,000 அடிக்கு மேல் திறம்பட இயங்கக்கூடிய MQ-9B Sea Guardian ட்ரோன்கள் இடைவிடாமல் 30 மணி நேரத்திற்கும் மேலாக பறக்க கூடியது. நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டு இருப்பதால் கடல் ரோந்து பணிகளில் இது சிறப்புடையதாக விளங்குகிறது. வாடகை ஒப்பந்தம் தவிர, இந்திய ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளுக்கும் 31 MQ-9B ட்ரோன்களை வாங்க சுமார் $3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. |