
இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார்
16.02.2022 07:08:26
பிரபல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹிரி உடல்நலக்குறைவால் இன்று (பிப்.,16) மும்பையில் காலமானார். அவருக்கு வயது 69.
1973ம் ஆண்டு நன்ஹா சிகாரி என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பப்பி லஹிரி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் 1985ம் ஆண்டு வெளியான பாடும் வானம்பாடி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.