லோகேஷ் கனகராஜ் -ஹ்ருதிஹாசனின் #Inimel ஆல்பம் பாடல் ரிலீஸ்

26.03.2024 00:15:09

லோகேஷ்  கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன்  நடிப்பில் உருவாகியுள்ள இனிமேல் என்ற ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.

 

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமானார். .அதன்பின்னர், கார்த்தி நடிப்பில் இவர்  இயக்கிய கைதி படம் சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து, கமலுடன் இணைந்து விக்ரம் படத்தை இயக்கினார். இப்ப இண்டஸ்டிரி ஹிட் ஆனது. இதையடுத்து விஜய நடிப்பில் மாஸ்டர் படம் இயக்கினார். இப்படத்தை அடுத்து, விஜய் உடன் இணைந்து லியோ என்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்தார்.

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி பி நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு முன்னோட்டமாக நடிகை சுருதிஹாசன் உடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்பாடலின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலாகி, பேசுபொருளானது. இந்த  நிலையில், இனிமேல் என்ற பாடலை  இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்பாடலை கமல் எழுத, ஸ்ருதிஹாசன் இசையமைத்துள்ளார். இப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலில் இருவரின் கெமிஷ்டரி ஓர்க்வுட் ஆகியுள்ளதாக பேசி வருகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்பாடல் இன்று வெளியாகியுள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவுள்ள புதிய படத்தை யார் இயக்கப் போகிறார்கள் ?அதை யார் தயாரிப்பது என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.