இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை ?

20.07.2021 21:46:54

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை துண்டியுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு தசுன் சானகவும் இந்திய அணிக்கு ஷிகர் தவானும் தலைமை தாங்கவுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளால் இந்தியா வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்தநிலையில் இன்று நடைபெறும் இப்போட்டி, இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.

இப்போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றால் தொடரை வென்று விடும். பதிலுக்கு இலங்கை அணி வெற்றிபெற்றால் தொடரை சமநிலை செய்து தக்கவைத்துக்கொள்ள முடியும்.

எனவே இப்போட்டி இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. போட்டியின் முடிவினை பொறுத்திருந்து பார்ப்போம்.