புடினுக்கு 50 நாட்கள்தான் கெடு.

15.07.2025 07:42:48

உக்ரைனுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு விளாடிமிர் புடின் உடன்படவில்லை என்றால், ரஷ்யா மீது 100 சதவீத வரிகள் விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டேவை ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்தித்தார். அப்போது அவர் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) கடுமையாக விமர்சித்து பேசினார்.

மேலும், உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் 50 நாட்களுக்குள் எட்டப்படாவிட்டால், ரஷ்யா மீது மிகவும் சக்தி வாய்ந்த இரண்டாம்நிலை வரிகள் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

அதாவது, ரஷ்யா ஜனாதிபதி புடின் 50 நாட்களுக்குள் உடன்படவில்லை என்றால், அமெரிக்கா 100 சதவீத வரிகளை ரஷ்யா மீது விதிக்கும் என்றார்.

புடின் குறித்து பேசிய ட்ரம்ப், "நாங்கள் ரஷ்யா மீது மிகவும் அதிருப்தி அடைந்துள்ளோம். ஜனாதிபதி புடினால் நான் ஏமாற்றமடைந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பே எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தேன். உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பப் போகிறோம்; அவற்றுக்கு ஐரோப்பா பணம் செலுத்தப் போகிறது" என தெரிவித்தார்.