
நடிகை நதியாவுக்கு கொரோனா
20.08.2021 10:18:58
நடிகை நதியா முழுவதுமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட போதிலும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
90-களில் ட்ரெண்ட் செட்டராக திகழ்ந்தவர் நதியா. குறிப்பாக பல ஃபேஷன் இலக்குகளை நிர்ணயித்தவர். ’எவர் யங்’ என்ற வார்த்தை இவருக்கு கச்சிதமாக பொருந்தும். தன் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் நதியா, அவ்வப்போது நல்ல கதைகளில் மட்டும் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் நதியாவிற்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சினிமாக்களில் அரிதாக நடித்த வரும் நதியா, விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கதை நன்றாக இருந்தால் மட்டுமே சினிமாக்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.