சென்னையில் சர்வதேச திரைப்பட விழா.

11.12.2025 13:41:19

தமிழக அரசு மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிஸியேஷன் பவுண்டேஷன் சார்பில், இன்று 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, சென்னை சத்யம் திரையரங்கில் தொடங்குகிறது. இன்று ஆரம்பமாகும் இந்த விழா மொத்தம் 8 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் 51 நாடுகளை சேர்ந்த 122 படங்கள் திரையிடப்பட உள்ளன.

ஆஸ்கரில் இருந்து 14 படங்கள், கேன்ஸ்சில் இருந்து 6 படங்கள் மற்றும் பெர்லினிருந்து 3 படங்கள் பரிந்துரை அடிப்படையில் இடம்பெறுகின்றன. இந்த விழாவில் 13 விருதுகள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தமிழில் இருந்து 3BHK, காதல் என்பது பொதுவுடைமை, அலங்கு, மாமன், பறந்து போ உட்பட 12 திரைப்படங்கள் உள்ளன. ரஜினியின் 50 வருட திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், பாட்ஷா படமும் திரையிடப்பட உள்ளது.