ஶ்ரீதிவ்யாவுக்கா இப்படி ஒரு நிலை!

19.02.2024 16:42:34

நடிகர் கார்த்தியின் முந்தைய படமான ஜப்பான் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாததால் அடுத்து ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். அதனால் கதைகளை தேர்ந்தெடுத்து நடத்தி வருகிறார்.

தற்போது கார்த்தி தனது 27 ஆவது படத்தில் நடித்து வருகிறார். 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் ஶ்ரீதிவ்யா, ஸ்வாதி கொண்டே உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடி ஸ்ரீதிவ்யா தான் என முன்பு கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் ஸ்ரீதிவ்யா தான் கார்த்தியின் தங்கையாக நடிக்கிறார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ஹீரோயின் ஆக நடித்து வந்த ஸ்ரீதிவ்யா தற்போது வாய்ப்புகள் குறைந்ததால் அக்கா தங்கை என குணச்சித்திர ரோல்களில் நடிக்க தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.