
வெளியானது ஜீனி படத்தின் அப்டி அப்டி பாடல்!
12.10.2025 15:13:01
அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூன் இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள புதிய திரைப்படம் ஜீனி.
இந்த திரைப்படம் அடுத்த வருடம் மார்ச் மாதம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ஜீனி திரைப்படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகிய 2 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் கடந்தாண்டு வெளியானது. அதில் அலாவுதீன் பூதத்தைப்போல் ரவி மோகன் இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
படத்தின் பாடலுக்கு ஏர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் அப்டி அப்டி வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.