ஆசிய - பசிபிக் பிராந்திய மாநாடு ஆரம்பம்!

20.02.2024 10:10:50

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டின் அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கியூ டோங்யு ஆகியோர் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.