ஜெயிலர்: ரசிகர்களுடன் FDFS பார்க்க வந்த தனுஷ்

10.08.2023 09:52:12

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியாகியுள்ளது. இப்படத்தை தனுஷ் சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் பார்த்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் தனுஷ் ரசிகர்களுடன் சென்னை ரோகினி திரையரங்கில் பார்த்துள்ளார். ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த தனுஷை ஆரவாரம் செய்து ரசிகர்கள் வரவேற்றனர்.