'அரசாங்கம் கூறுகின்ற நல்லிணக்கம் இதுதானா - அம்பிகா கேள்வி

20.11.2021 10:00:00

வடக்கில் வாழும் மக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான சுதந்திரம் தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றது. 'அரசாங்கம் கூறுகின்ற நல்லிணக்கம் இதுதானா?' என  சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கார்த்திகைத் தீபத்திருநாளை முன்னிட்டு மக்கள் தீபங்களை ஏற்றிக்கொண்டாடிய வேளையில், மாவட்டத்தின் சில இடங்களில் அதனைக் குழப்பும் இராணுவத்தினர் செயற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார், தொடர்ந்தும் அந்தப் பதிவில்,

நவம்பர் மாதம் 27 ஆம் திகதியன்று போரில் உயிரிழந்த உறவுகளின் நினைவிடங்களுக்குச் சென்று விளக்கேற்றி அவர்களை நினைவுகூருதல் பலவருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில், அண்மைக்காலத்தில் அதற்குத் தடைகளும் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன.