2025ஆம் ஆண்டு இதுவரை அதிக வசூல் செய்துள்ள படங்கள்!
|
இந்த ஆண்டு துவங்கி தற்போது வரை 10 மாதங்கள் நிறைவு பெறவுள்ளது. இதுவரை 2025ல் இந்திய சினிமாவில் பல மொழிகளில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. டிராகன், டூரிஸ்ட் பேமிலி, குட் பேட் அக்லி, லோகா, சித்தாரே ஜமீன்பர், மஹா அவதார் நரசிம்மா, காந்தாரா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு இதுவரை வெளிவந்த திரைப்படங்களில், அதிக வசூல் செய்த 20 திரைப்படங்கள் குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். |
|
1. காந்தாரா சாப்டர் 1 - ரூ. 850 கோடி (இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது) 2. சாவா - ரூ. 766 கோடி 3. சாய்ரா - ரூ. 569 கோடி 4. கூலி - ரூ. 525+ கோடி 5. வார் 2 - ரூ. 360 கோடி 6. மஹா அவதார் நரசிம்மா - ரூ. 322 கோடி 7. OG - ரூ. 303 கோடி 8. லோகா - ரூ. 301 கோடி 9. குட் பேட் அக்லி - ரூ. 274 கோடி 10. லூசிஃபர் 2 எம்பூரான் - ரூ. 266 கோடி 11. சித்தாரே ஜமீன்பர் - ரூ. 264 கோடி 12. ஹவுஸ்புல் - ரூ. 263 கோடி 13. சங்கராந்திகி வஸ்துனம் - ரூ. 255 கோடி 14. தொடரும் - ரூ. 232 கோடி 15. ரைட் 2 - ரூ. 227 கோடி 16. கேம் சேஞ்சர் - ரூ. 185 கோடி 17. ஜாலி எல்எல்பி 3 - ரூ. 167 கோடி 18. சிக்கந்தர் - ரூ. 157 கோடி 19. டிராகன் - ரூ. 151 கோடி 20. விடாமுயற்சி - ரூ. 147 கோடி இதன்மூலம் 2025ஆம் ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களில் அதிக வசூலை ஈட்டி முதலிடத்தை காந்தாரா சாப்டர் 1 படம் பிடித்துள்ளது. இந்த ஆண்டு இப்படம்தான் முதலிடத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் இரண்டு மாதங்களில் மாற்றம் இந்த லிஸ்டில் ஏற்படுகிறதா என்று. |