தலைவர் இரா. சம்பந்தன் எரிக் சொல்ஹெய்ம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர்க்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.
சந்திப்பு
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கையின் பொருளாதார மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும், அதனைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் எரிக் சொல்ஹெய்ம்க்கு கூறியுள்ளார்.
மேலும், இலங்கையின் தமிழ் அரசியலின் மகத்தான மனிதருக்கு மரியாதை செலுத்துவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.