அடிமைத்தனத்தின் சங்கிலியை தலிபான்கள் தகர்த்துள்ளனர்: இம்ரான் கான்
16.08.2021 16:04:36
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளதாவது:
ஆங்கில வழிக்கல்வி மற்றும் அதனால் ஏற்பட்ட கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு உள்ளனர். மற்ற கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டு உளவியல் ரீதியாக அடிபணிந்து உள்ளீர்கள். அது, உண்மையான அடிமைத்தனத்தை விட மோசமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கலாச்சார அடிமைத்தனத்தின் சங்கிலிகளை தூக்கி எறிவது கடினம். ஆப்கானிஸ்தானில் இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். தலிபான்கள் அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.