பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுத்தார் கட்டார் இளவரசர்!

13.02.2021 10:17:15

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடுவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கட்டார் இளவரசர் பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுப்பு தெரிவிக்கும் காணொளி வைரலாகி வருகின்றது.

கட்டாரில் டைக்ரஸ் யுஏஎன்எல் அணிக்கும் பேயர்ன் மூனிச் அணிக்கும் இடையிலான போட்டியில் சிறப்பாகப் பணியாற்றிய நடுவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதன்போது ஆண் நடுவர்களுக்கு விருது வழங்கிய கட்டார் இளவரசர் ஷேக் ஜோஆன் பின் ஹமாத் அல் தானி, பெண் நடுவர்களுக்கு கைகுலுக்க மறுத்து விட்டார்.

இஸ்லாமியச் சட்டப்படி அன்னியப் பெண்களைத் தொடக் கூடாது என்பதால் அவர் அப்படி நடந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.