கார்த்தி கொடுத்த கைதி 2 அப்டேட்!
01.03.2024 14:55:05
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.
சமீபத்தில் மீண்டும் விஜய் படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இதனால் அவரின் இயக்கத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் கைதி 2 திரைப்படம் இப்போதைக்கு வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கைதி 2 பற்றி ஒரு கல்லூரி நிகழ்வில் பேசிய கார்த்தியிடம் மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்த்தி “டில்லி கண்டிப்பா திரும்ப வருவார். கைதி 2 விரைவில் உருவாகும். அடுத்த வருடம் அதற்கான பணிகளை தொடங்கவுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.