ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு!

11.06.2024 07:49:55

ஆந்திர மாநில முதலமைச்சராக 4-வது முறையாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை அமராவதியில் பதவியேற்க உள்ளார்.

 

அதன்படி ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தெலுங்கு தேசம்,ஜனசேனா, பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றிருந்தது

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியிலிருந்து விஜயவாடாவிற்கு விமானம் மூலம் வந்திருந்ததுடன் தனது கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடனும் இறுதியாக கலந்தாலோசனை நடத்தி, நாளை பதவிஏற்பு விழாவில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.