ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம்

23.03.2024 08:59:12

ரஷ்யாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் அரங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குரோகஸ் சிட்டி ஹோல் என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கு பலர் கூடியிருந்தனர்.

அப்போது ரஷ்ய இராணுவ உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் 5 பேர், இசை நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த பார்வையாளர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட இடத்தில் தீ வைப்பு சம்பவங்களும் இடம்பெற்றதால் அப்பகுதியில் தீ பரவியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டடுள்ளது.

இணையத்தில் பரவும் பல தாக்குதல் காணொளிகளில், இசை நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் தரையில் வீழ்ந்து பாதுகாப்பைத் தேடுவதும், இருக்கைகளுக்குப் பின்னால் மறைந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதும் துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் மற்றும் கூச்சல் இடம் சந்தம் கோட்பதையும் அங்கிருந்து பலர் வெளியே பாதுகாப்புத் தேடி ஓடுவதையும் வெளிப்படுத்துகின்றது.

தாக்குதலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த ரஷ்யா பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இந்த தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.