வவுனியாவில் தந்தை செல்வாவின் ஜனனதின நிகழ்வு !

31.03.2021 09:06:52

வவுனியாவில் தந்தைசெல்வாவின் 123வது ஜனனதின நிகழ்வுகள் வவுனியா மணிக்கூட்டுக் கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில், தமிழரசுகட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா அன்னாரது சிலைக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், அதன்பின்னர் ஏனையவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.