இலங்கை மீது சைபர் தாக்குதல்?

08.08.2025 08:16:35

உலகின் முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான கெஸ்பர்ஸ்கி (Kaspersky) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இலங்கையும் அதிக ஆபத்து நிலை கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த அறிக்கையில், இலங்கை அரசு அமைப்புகள், முக்கிய உள்கட்டமைப்புகள், வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகள் ஆகியவை ஹேக்கர்கள்  குறிவைக்கும் முக்கிய தளங்களாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ரான்சம்வேர் (Ransomware)பிஷிங் (Phishing) தாக்குதல்கள் மற்றும் முக்கிய தரவுகளை திருடும் அதிநவீன மால்வேர்கள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கெஸ்பர்ஸ்கி நிறுவனம், சைபர் தாக்குதல்களுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துதல், ஊழியர்களுக்கு சைபர் பாதுகாப்பு பயிற்சிகள் வழங்குதல், மற்றும் மென்பொருட்களை நேர்மையான புதுப்பிப்புகளுடன் பராமரித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

 

மேலும், உலகளவில் அரசியல் பதற்றங்கள் மற்றும் பன்னாட்டு மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், சைபர் தாக்குதல்கள் ஒரு புதிய வகை ஆயுதமாக மாறி வரும் நிலையில், இலங்கையும் தனது டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவ் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.