
இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய ஜேர்மனி!
ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்தியுள்ளது. ஜேர்மன் அரசு ஆகஸ்ட் 8 முதல் அக்டோபர் 12 வரை இஸ்ரேலுக்கு எந்தவொரு புதிய ஆயுத ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கவில்லை. இது, சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் அறிவித்த காசாஇஸ்ரேல் போர் தொடர்பான ஆயுதக்க கட்டுப்பாடுகளுக்கு பிறகு ஏற்பட்ட முக்கிய மாற்றமாகும். மெர்ஸ் தலைமயிலான புதிய அரசாங்கம், இஸ்ரேலின் காசா தாக்குதலை எதிர்த்து, போர் தொடர்பான ஆயுதங்களை அனுமதிக்க முடியாது என அறிவித்தது. |
இதற்கு எதிராக எதிர்க்கட்சியான Left Party, "முழுமையான ஆயுதத்தடை வேண்டும்" என வலியுறுத்தியுள்ளது. அவர்கள் "இஸ்ரேலின் நடவடிக்கைகளில் ஜேர்மனி பங்கேற்கும் அபாயம் உள்ளது" எனவும் தெரிவித்துள்ளனர். ஜேர்மனி கடந்த ஆண்டுகளில், இஸ்ரேலுக்கு சுமார் 500 மில்லியன் யூரோ மதிப்பிலான ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் சிறிய போர் கப்பல்கள், துப்பாக்கிகள், இராணுவ வாகனங்கள், மின்னணு உபகரணங்கள் உள்ளிட்டவை அடங்கும். இவை காசாவில் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை ஜெர்மனியின் வெளிநாட்டு கொள்கையில் ஒரு முக்கிய திருப்பமாகவும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டங்களைப் பொருத்து, அரசியல் மற்றும் நெறிமுறைகளில் புதிய நிலைப்பாட்டை உருவாக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. |