சர்வகட்சி அரசாங்கமா..!

18.08.2022 16:00:00

சர்வகட்சி அரசாங்கத்திற்கு பதிலாக தேசிய அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கவனம் செலுத்தியுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தில் கட்சிகளாக இணைவதை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக அரசாங்கத்தில் இணைந்து கொள்வதால் தேசிய அரசாங்கத்தை அமைப்பதே பொருத்தமானது என அரசியல் கட்சிகள் அதிபரிடம் சுட்டிக்காட்டியுள்ளன.

பத்தொன்பதாவது அரசியலமைப்புத் திருத்தத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையை முப்பதிலிருந்து நாற்பத்தி இரண்டாக அதிகரிக்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளதாக அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.