தற்காலிகமாக அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்!

02.08.2022 10:00:21

நாட்டில் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய விதை இறக்குமதியாளர்கள் சங்கத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

மேலும், கடந்த போகங்களை விட இந்த போகத்தில் எதிர்பார்த்தமையை விடவும் அதிக நெல் அறுவடை கிடைக்கிறது, ஆகையால் தேவையான அளவு அரிசி நாட்டில் உள்ளமையினால் இந்த போகம் நிறைவடையும் போது வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு அரசிற்கு ஆலோசனை வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.

 

எதிர்காலத்தில் இறக்குமதி 

மேலும், நாட்டின் எதிர்காலத்திற்கு தேவைப்படும் அரிசியை மாத்திரமே இறக்குமதி செய்ய முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.