யாழில் ஒரே மாதத்தில் 531 பேர் கைது

22.02.2024 07:54:11

யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த 531 பேர் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, நீதிமன்றங்களினால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 230 நபர்களும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 301 நபர்களுமே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.