வந்து விட்டான் அடங்காத அசுரன்
11.05.2024 07:05:00
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் , ரஹ்மானின் இசையில், தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50 வது திரைப்படமான ராயனின் முதலாவது பாடல் நேற்று வெளியாகியிருந்தது.
இந்த படத்தில் ,செல்வராகவன், பிரகாஷ்ராஜ் , துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி, என பலர் நடிக்கவுள்ளதாக சித்திரை புத்தாண்டு தினத்தன்று படக்குழுவினர் போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருந்தனர்.
ராயன் திரைப்படம் ஜீன் 13ம் திகதி வெளியாகவுள்ள நிலையில் , அதன் முதல் பாடலான அடங்காத அசுரன் என்ற பாடல் நேற்று வெளியாகி மக்கள் மனதை கவர்ந்துள்ளது.